பற்றி எரியும் காட்டுத்தீயால் கருமை நிறத்தில் காட்சியளிக்கும் கொடைக்கானல் வனப்பகுதி!

திண்டுக்கல்: கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத்தீயால் வனப்பகுதி முழுவதும் கருமை நிறத்தில் காட்சியளிக்கிறது. கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடுமையான காட்டுத்தீ பற்றி எரிந்தது. இந்நிலையில் கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால் காட்டுத்தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தொடர்ந்து பற்றி எரிந்த காட்டுத்தீயினால் பசுமை போர்த்திய புல்வெளிகள் அனைத்தும் கருமை நிறமாக காட்சியளிக்கிறது. மேலும் காட்டுத்தீ காரணமாக அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் செடிகள் முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் உணவு சங்கிலி ஏதும் இன்றி தவித்து வருகின்றது.

இதை தொடர்ந்து கோடைகாலம் தொடங்க இருப்பதால் மேலும் இதுபோன்ற காட்டுத்தீ ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் நவீன இயந்திரங்களை கொண்டு காட்டுத்தீயை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கொடைக்கானலில் ஏற்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வனப்பகுதிகள் அனைத்தும் தற்போது கருமை நிறமாக காட்சியளிக்கிறது.

Related Stories: