சில்லி பாயின்ட்...

* ஆஸ்திரேலிய அணி கடைசியாக 2017ல் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

* 1987ல் சென்னையில் முதல் முறையாக நடந்த ஒருநாள் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளே மோதின. ரிலையன்ஸ் உலக கோப்பை தொடரில் நடந்த அப்போட்டியில் ஆஸ்திரேலியா 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

* 1997ல் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 327 ரன் குவித்ததே இந்த மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோராகும்.

* சிறந்த பந்துவீச்சுக்கான சாதனை வெஸ்ட் இண்டீசின் ராம்பால் வசம் உள்ளது (இந்தியாவுக்கு எதிராக 51 ரன்னுக்கு 5 விக்கெட்).

* எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் மொத்தம் 23 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. அவற்றில் 13 போட்டியில் விளையாடி உள்ள இந்தியா 7 வெற்றி, 5 தோல்வி கண்டுள்ளது. ஒரு போட்டியில் முடிவு இல்லை.

* உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறக் கூடிய 17-18 வீரர்களை இறுதி செய்துள்ளதாக இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

* டெல்லியில் நடைபெறும் மகளிர் உலக பாக்சிங் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதியில் விளையாட இந்திய வீராங்கனைகள் நிக்கத் ஜரீன், நீத்து கங்காஸ், மனிஷா மவுன் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

* வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வெஸ்ட் இண்டீஸ் 48.2 ஓவரில் 260 ரன் ஆல் அவுட் (கிங் 72, பூரன் 39, ஹோல்டர் 36); தென் ஆப்ரிக்கா 29.3 ஓவரில் 264/6 (ஹெய்ரிச் கிளாசன் 119*, 61 பந்து, 15 பவுண்டரி, 5 சிக்சர், மார்கோ 43). 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

* மகளிர் பிரிமியர் லீக் தொடரில் ஆர்சிபி அணியுடன் நேற்று மோதிய மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆர்சிபி 20 ஓவரில் 125/9; மும்பை இந்தியன்ஸ் 16.3 ஓவரில் 129/6.

* பாகிஸ்தானுடன் டி20 போட்டியில் மோதவுள்ள ஆப்கானிஸ்தான் அணி விவரம்: ரஷித் கான் (கேப்டன்), அப்சர் சஸாய், நூர் அகமது, ரகமதுல்லா குர்பாஸ், கரிம் ஜனத், முஜீப் உர் ரகுமான், அஸ்மதுல்லா உமர்சாய், உஸ்மான் கானி, பரீத் அகமது, முகமது நபி, குலாபிதின் நயிப், பஸல்லாக் பரூக்கி, ஷராபுதீன் அஷ்ரப், செதிக்குல்லா அடல், நவீன் உல் ஹக், நஜிபுல்லா ஸத்ரன், இப்ராகிம் ஸத்ரன்.

Related Stories: