வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஈரோட்டில் 28ம் தேதி பேரணி: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: தந்தை பெரியார் பங்கெடுத்து வெற்றி கண்ட வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் வருகிற 30ம் தேதி தொடங்கி நடத்துவதென கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்திருக்கிறது. மார்ச் 30ம் தேதி நடைபெறுகிற தொடக்க விழாவில் ய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார். இதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் கேரள மாநில காங்கிரஸ் சார்பாக வருகிற 28ம் தேதி காலை 10 மணிக்கு நினைவு பேரணி நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பேரணியை நான் கொடியசைத்து தொடக்கி வைப்பதோடு, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினரும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இப்பேரணிக்கு தலைமை வகித்து சிறப்பிக்க இருக்கிறார். ஈரோட்டில் தொடங்குகிற இந்நினைவு பேரணி மார்ச் 29ம் தேதி பாலக்காடு வழியாக அன்று மாலை வைக்கம் சென்றடைகிறது. இந்த நினைவுப் பேரணி செல்லுகிற இடங்களில் வரவேற்க,பேரணியில் பங்கு கொள்கிறவர்கள் தங்குவது உள்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. குழுவில் உள்ளவர்கள் வைக்கம் போராட்ட நூற்றாண்டு நினைவுப் பேரணி மகத்தான வெற்றி பெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: