காயத்தில் இருந்து மீண்ட பும்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. 28 வயதான இவர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 3 மாதங்களாக  விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவில் நடந்த டி.20 உலக கோப்பை தொடரிலும் அவர் ஆடவில்லை. இந்நிலையில் காயத்தில் இருந்து அவர் மீண்டு வருகிறார். வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் பும்ரா களம் இறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.

பிளேஆப் சுற்றுக்கு நுழையுமா தமிழ்தலைவாஸ்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 9வது புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில்,  டெல்லி 41-24 என யு மும்பாவை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் குஜராத் 44-30 என தெலுங்கு டைட்டன்சை சாய்த்தது. இன்று இரவு 7.30 மணிக்கு பாட்னா-பெங்களூரு புல்ஸ், இரவு 8.30 மணிக்கு தமிழ்தலைவாஸ்-யு.பி. யோத்தா அணிகள் மோதுகின்றன. இதில் டிரா செய்தால் கூட தமிழ் தலைவாஸ் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

வெள்ளி வென்ற மீராபாய் சானு: உலக பளு தூக்குதல் சாம்பியன் ஷிப் போட்டி கொலம்பியாவின் பொகோட்டாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த போட்டியில் 49 கிலோ  எடை பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்றார். ஒலிம்பிக் பதக்கம் வென்ற மீராபாய் சானு மொத்தம் 200 கிலோ (87 கிலோ ஸ்னாட்ச் + 113 கிலோ கிளீன் & ஜெர்க்), எடையை தூக்கி வெள்ளி வென்றார். மணிக்கட்டில் காயத்துடன் போரடிய அவர் தங்கத்தை தவறவிட்டார். முன்னதாக 2017 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பிறகு, உலகப் போட்டியில் சானு பெற்ற இரண்டாவது பதக்கம் இதுவாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார்.

Related Stories: