டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை; ஆம் ஆத்மி 75 வார்டுகளிலும், பாஜக 55 வார்டுகளிலும் வெற்றி..!

டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. 250 வார்டு உறுப்பினர்கள் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 709 பெண்கள் உட்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் இதில் போட்டியிட்டனர். ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் 250 வார்டுகளிலும் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. ஆனால் காங்கிரஸ் 247 வார்டுகளில் மட்டுமே தனது வேட்பாளர்களை நிறுத்தியது.

இந்நிலையில் இன்று காலை 8 மணி தொடங்கி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 43 மையங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆரம்பநிலை போக்கின்படி பாஜக, ஆம் ஆத்மி இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே முன்னிலை வகித்த ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில் தற்போதையை நிலவரப்படி; ஆம் ஆத்மி கட்சி 75 வார்டுகளிலும், பாஜக 55 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

60 இடங்களில் ஆம் ஆத்மியும், 48 இடங்களில் பாஜகவும் முன்னிலையில் உள்ளது. டெல்லியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் காங்கிரஸ் 4 இடங்களில் வென்ற நிலையில் 6 வார்டுகளில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. ஒரு வார்டில் வென்ற நிலையில் 2 வார்டுகளில் சுயேட்ச்சைகள் முன்னிலையில் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: