புயல் எச்சரிக்கையை அடுத்து நாகை மாவட்டத்தில் களமிறங்கியது தேசிய பேரிடர் மீட்பு படை: எந்தநேரமும் தயார் நிலையில் இருக்க மாவட்ட ஆட்சியார் அறிவுறுத்தல்

நாகை: புயல் சின்னம் காரணமாக கனமழை பாதிப்பை எதிர்கொள்ள நாகை மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர். நகை மாவட்ட ஆட்சியர் அருண் தங்கராஜ் தேசிய பேரிடர் மீட்பு படையினரை நேரில் சந்தித்தது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமா டெல்டா மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சூழலில் கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர்.இந்த மீட்பு படையினர் நாகை பாரதிதாசன் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மீட்புபணிகள் தீவிரமாக இருக்கவேண்டும் எனவும், கனமழை தொடங்கினாள் எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அரக்கோணத்தில் இருந்து ஆய்வாளார் பிரசாந்த் ஜி.ஸ்ரீநாத் தலைமையில் வந்துள்ள 25 தேசிய பேரிடர் மீட்பு படையினர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் முகாமிட்டு, அதிக மழை பாதிப்பை சந்திக்கும் கிராமங்கள் தாழ்வான பகுதிகளில் ஏற்படக்கூடிய மழை பாதிப்புகளை எதிர்கொண்டு அங்கிருக்க கூடிய பொதுமக்களை மீட்கக்கூடிய பணிக்களில் ஈடுபடுவார்களா என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories: