தமிழகத்திற்கு ஆளுநர் தேவையில்லை; வாக்குக்காக அம்பேத்கர் புகழ்பாடும் பாஜக: சீமான் பேட்டி

சென்னை: வாக்குக்காக மட்டுமே அம்பேத்கர் பற்றி பாஜக பேசி வருகிறது என்று சீமான் விமர்சனம் செய்துள்ளார். சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அம்பேத்கர் நினைவு மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; வாக்குதான் காரணம், எந்த அளவிற்கும் பாஜக செல்லும்.

வல்லபாய் பட்டேலுக்கு எதற்காக ரூ.3,000 கோடியில் சிலை வச்சாங்க, நாட்டின் பெருமை காந்தியா? அம்பேத்கரா? வல்லபாய் பட்டேலா?; இந்தியாவை தாண்டி வல்லபாய் பட்டேலை யாருக்காவது தெரியுமா? வாக்குக்காக மட்டுமே அம்பேத்கர் பற்றி பாஜக பேசி வருகிறது. நிலம் கையகப்படுத்துவதில் காட்டும் தீவிரத்தை வேலைவாய்ப்பில் காட்டுவதில்லை. தமிழகத்தில் எல்லா இடங்களிலும் வட மாநிலத்தவர்கள் தான் இருக்கின்றனர். தமிழகத்தில் உள்ள வட மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுக்க கூடாது.

தமிழகத்திற்கு ஆளுநர் தேவையில்லை. மக்களால் தேர்ந்தெடுத்த அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒத்துழைப்பதில்லை. நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் ஆண்கள், 20 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவார்கள். டெல்லியில் புதியதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: