ஐஐடிகளில் பணி நியமனங்களை கண்காணிக்க எம்பிக்களை கொண்ட குழு அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஐஐடிகளில் பணி நியமனங்களை கண்காணிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஐ.ஐ.டியில் 2021 மார்ச் நிலவரப்படி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 596 பேர். அவர்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 62 பேர், அதாவது 10.40 சதவீதம் மட்டும் தான். பட்டியலினத்தவர் எண்ணிக்கை 16, அதாவது 2.68 சதவீதம் மட்டும் தான். பழங்குடியினரின் எண்ணிக்கை மூவர், அதாவது அரை சதவீதம் தான்.

ஐ.ஐ.டிகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவற்றில் இட ஒதுக்கீடு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆனால், ஐஐடி நிர்வாகங்கள் அதை மதிக்க மறுக்கின்றன. ஐ.ஐ.டிகளில் சமூக நீதியை உறுதி செய்ய இன்னும் எவ்வளவு தொலைவு பயணம் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. இந்த நிலை இப்படியே தொடர்வதை அனுமதிக்கக் கூடாது. ஐ.ஐ.டிகளில் சமூக நீதியை உறுதி செய்ய அங்கு நடைபெறும் பணி நியமனங்களை கண்காணிக்க பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்க வேண்டும்.

Related Stories: