ரஷ்யாவின் காஸ்பியன் கடற்கரையில் 2,500 கடல் நாய்கள் இறந்து கரை ஒதுங்கின

மாஸ்கோ: தெற்கு ரஷியாவின் காஸ்பியன் கடற்கரையில் 2,500 கடல் நாய்கள் உயிரிழந்து கரை ஒதுங்கின. தெற்கு ரஷியாவின் காஸ்பியன் கடற்கரையில் கிட்டத்தட்ட 2,500 கடல் நாய்கள் உயிரிழந்து கரை ஒதுங்கின. இத்தனை கடல் நாய்கள் உயிரிக்க காரணம் தெரியவில்லை. ஒருவேளை அவை இயற்கையாக இறந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முதலில் 700 கடல் நாய்கள் இறந்திருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் நடத்தப்பட்ட விரிவான ஆய்வில் இந்த எண்ணிக்கை 2,500 ஆக அதிகரித்தது.

காஸ்பியன் சுற்றுச்சூழல் மைய தலைவர் ஜார் காபிசோவ் கூறுகையில், ‘இவை ஒரு வாரத்திற்கு முன் இறந்திருக்கலாம். அவை வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை’ என தெரிவித்தார். ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் கடல் நாய்கள் இறந்திருக்கும் சம்பவம் ஏற்கெனவே பல முறை நடந்துள்ளது. காஸ்பியன் கடல் பகுதியில் சுமார் 3 லட்சம் கடல்நாய்கள் வரை இருக்கின்றன. காஸ்பியன் கடலில் உள்ள ஒரே பாலூட்டிகளான காஸ்பியன் கடல் நாய்கள் 2008ம் ஆண்டு முதல் அழியும் நிலையில் உள்ளது. எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: