கிடுகிடுவென உயரும் நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.40,360க்கு விற்பனை.. இல்லத்தரசிகள் வேதனை..!!

சென்னை: தங்கம் விலை கடந்தவாரக் கடைசியில் குறைந்திருந்த நிலையில், வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை  சவரனுக்கு ரூ.32 குறைந்திருந்த நிலையில் தற்போது ரூ.232 விலை உயர்ந்துள்ளது. தங்கம் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. தினசரி ஏற்ற இறக்கத்துடன் கண்ணாமூச்சி ஆடி வந்தாலும், தங்கத்தின் மீதான மோகம் மட்டும் மக்களுக்கு குறையவில்லை.  தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது தினசரி சந்தை நிலவரத்தை பொருத்து காலை, மாலை என்று இரு முறை நிர்ணயிக்கப்படுகிறது. முக்கிய பண்டிகை நாட்கள், திருமணங்கள் அதிகம் நடைபெறும் சுப முகூர்த்த மாதங்கள் மற்றும் நாட்கள் போன்ற சந்தர்ப்பங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கும். இது தவிர அதிக விற்பனை நடக்காத நாட்களில் தங்கத்தின் விலை குறைந்து காணப்படும்.

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.40,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.29 உயர்ந்து ரூ.5,045க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் அதிகரித்து ரூ.72.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.40ஆயிரத்துக்கு மேல் உயர்ந்தது நடுத்தரக் குடும்பத்து மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து ஏற்றத்துடன் நகர்வது, சர்வதேச சந்தை சூழல் சாதகமாக இருப்பதால், தங்கம் விலை உயர்ந்து வருகிறது. வரும் நாட்களில் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories: