வெஜ் நூடுல்ஸ்

செய்முறை:

முதலில், ஒரு பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் ஊற்றி, அத்துடன் ஒரு ஸ்பூன் எண்ணெய், உப்பு சேர்த்து சுட வைக்கவும். தண்ணீர் சூடானதும் நூடுல்சை சேர்த்து பாதி வேக வைத்து எடுக்கவும். பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, நீளவாக்கில் வெட்டி வைத்த கேரட், குடை மிளகாய், முட்டை கோஸ், வெங்காயத் தாள் சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன், தக்காளி சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். காய் பாதி வெந்ததும் வேக வைத்த நூடுல்சை மசாலாவுடன் சேர்த்து நன்றாக கிளறி, வேக விடவும். தேவைப்பட்டால் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். நூடுல்ஸ் வெந்ததும், மிளகுத் தூள், எலுமிச்சைப் பழ சாறு, வெங்காயத்தாள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வெஜ் நூடுல்ஸ் ரெடி..!

Related Stories: