ஜவ்வரிசி லட்டு

செய்முறை:

முதலில் ஜவ்வரிசியை தண்ணீரில் சுமார் 8 மணி நேரம் ஊறவிடவும். வாணலியை அடுப்பில் வைத்து ஜவ்வரிசியை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். சுமார் 5 நிமிடங்களுக்கு கிளறிக் கொண்டே இருந்தால் வெந்து உதிரியாக மாறும். பின்னர், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி வேகவிடவும். அத்துடன், தண்ணீரில் ஊறவைத்த குங்குமப்பூ சேர்த்து நன்றாக கிளறி விடவும். அவ்வபோது நெய் சேர்க்கவும். ஜவ்வரிசி நன்றாக வெந்து வாணலியில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும் பொடித்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும். சூடு ஓரளவுக்கு தணிந்ததும், கொஞ்சமாக எடுத்து லட்டு போன்று உருண்டைகள் செய்து வைக்கவும். அவ்ளோதாங்க.. சுவையான ஜவ்வரிசி லட்டு ரெடி..!

Related Stories: