சப்பாத்தி வெஜ் ரோல்

செய்முறை:

கோதுமை மாவை உப்பு சேர்த்து, எண்ணெய்,  தண்ணீர் விட்டு, நன்கு பிசைந்து, 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு  வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்  பேஸ்ட் வதக்கி, அத்துடன் வெங்காயம் சேர்க்கவும். பின்பு உப்பு, மஞ்சள் தூள்  சேர்த்து வதக்கி, அத்துடன் துருவிய காய்களை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு  வதக்கவும். இதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது கோதுமை மாவில்  மெல்லிய சப்பாத்தி இட்டு, இதனை பொன்னிறமாக சுட்டு, அதன் நடுவில் காய்கறி  கலவையை வைத்து நன்கு சுருட்டி, Silver Paper-ல் சுருட்டி பிள்ளைகளுக்கு  கொடுத்தால் சத்து நிறைந்த சப்பாத்தி ரோல் தயார். தேவைப்பட்டால் சப்பாத்தி  மேல் புதினா சட்னி மற்றும் மேயனீஸ் தடவிக் கொடுக்கலாம்.

Related Stories: