தமிழக அளவில் கருங்குழி பேரூராட்சி மக்கள் நலத்திட்ட பணிகளில் முதல் இடம்; ரூ.10 லட்சத்தை முதல்வர் பரிசாக வழங்கினார்

மதுராந்தகம்:  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே கருங்குழி பேரூராட்சி உள்ளது. இங்கு, மக்களுக்கான சுகாதார பணிகள், குடிநீர் வழங்குதல், கழிவு நீர் வெளியேற்றும் பணிகள், தெருவிளக்கு வசதிகள், பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தூர்ந்துபோன நீர்நிலைகளை சீரமைத்தல், புதிய நீர் நிலைகளை உருவாக்குதல், மியோவாக்கி என அழைக்கப்படும் அடர் காடுகளை உருவாக்குதல், பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு நிலங்களில் விலைமதிப்பு மிக்க தேக்கு உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர்.  

குழந்தைகளை விளையாடச் செய்து, தங்களின் பயணத்தை தொடர வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக தமிழக அளவில் முதல் முறையாக ரூ. 5 கோடி செலவில் கழிவு நீர் கசடு மேம்பாட்டு நிலையம் அமைத்து சிறப்புற செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளில் சிறப்பாக கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பேரூராட்சி செயல்பட்டு வந்துள்ளது. இங்கு நடைபெறக்கூடிய செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் அவ்வப்போது இங்கு வந்து ஆய்வு செய்து, அவர்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 490 பேரூராட்சிகளில் முதன்மையான பேரூராட்சியாக கருங்குழி பேரூராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு பேரூராட்சிக்கான  விருது நேற்று முன்தினம் சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின பெருவிழாவின்போது முதல்வர் வழங்கப்பட்டது.

மேலும், பேரூராட்சிக்கான சிறப்பு நிதியாக ரூ. 10 லட்சமும் வழங்கப்பட்டது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனை பேரூராட்சி தலைவர் ஜி.தசரதன், செயல் அலுவலர் மா.கேசவன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Related Stories: