ஆந்திராவில் உள்ள 10 தங்க சுரங்கங்களை மீண்டும் திறக்க ஏலம்

திருமலை: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுரங்கத் துறையின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியாக, தங்கச் சுரங்கங்களை விற்க ஒன்றிய அரசு தயாராகி வருகிறது. அதிகாரப்பூர்வ தகவலின்படி, ஆந்திராவில் உள்ள 10 பகுதிகளில் உள்ள 5 சுரங்கத்திற்கு வரும்  26ம் தேதி ஏலம் விடப்படும் என்றும், மீதமுள்ள 5 சுரங்கத்திற்கு  29ம் தேதி ஏலம் விடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், ராமகிரியில் உள்ள தங்கச் சுரங்கங்களில் ராமகிரி வடக்கு.  

பொக்சம்பள்ளி வடக்கு பிரிவு, பொக்சம்பள்ளி தெற்கு பிரிவு, ஜவகுலா-ஏ பிரிவு, ஜவகுலா-பி பிரிவு, ஜவகுலா-சி பிரிவு, ஜவகுலா-டி பிரிவு, ஜவகுலா-இ பிரிவு, ஜவகுலா-எப் பிரிவு ஆகிய தங்கச் சுரங்கங்களுக்கான ஏலம் நடைபெற உள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இதேபோன்று, உத்தர பிரதேசத்தில் மீதமுள்ள 3 தங்கச் சுரங்கங்கள் இந்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது. ஆனால், இதற்கான தேதி எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.  அம்மாநிலத்தில் உள்ள மூன்று தங்கச் சுரங்கங்களில் 2 சோன்பத்ராவில் உள்ளன.  உத்தரப் பிரதேசத்தில் உள்ள இந்த மூன்று தங்கச் சுரங்கங்களுக்கான டெண்டர் கடந்த மே 21ம் தேதி வெளியிடப்பட்டது.

4 ஆயிரம் பேருக்கு வேலை

* ஆந்திராவில் உள்ள அனந்தபுரம் மாவட்டம், ராமகிரி தங்க சுரங்கம் முதன் முதலில் 1905 முதல் 1927 வரை ஜான்டெய்லர் & சன்ஸ் லிமிடெட், பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

* பின்னர். கோலார் கோல்டு பேக்டரி மூலம் பாரத் கோல்டு பேக்டரி என்ற பெயரில் ராமகிரியில் 2001ம் ஆண்டு வரை தங்க சுரங்கம் செயல்பட்டு வந்தது.

* அதன் பிறகும் மூடப்பட்ட இந்த தங்க சுரங்க தொழிற்சாலையை மீண்டும் செயல்படுத்த ஏலம் விடப்பட உள்ளதால் 3000 - 4000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

Related Stories: