தேர்தல் இலவசங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் தங்களையும் இணைக்கக்கோரி திமுக மனு.!

டெல்லி: தேர்தலில் இலவசங்கள் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் தங்களையும் இணைக்கக்கோரி திமுக மனு அளித்துள்ளது. இலவசங்கள் தொடர்பான வழக்கில் திமுக தங்களையும் சேர்க்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடையிட்டு மனு அளித்துள்ளது. அரசியல் காட்சிகள் இலவச திட்டங்களை எதிர்த்து வழக்கறிஞரும் பாஜக நிர்வாகியுமான அஸ்வினி குமார் உபாத்தியாய மனு அளித்தனர்.

பாஜகவின் அஸ்வினி என்பவர் தொடர்ந்த தேர்தலில் இலவச திட்டங்களை எதிர்ப்பும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தலில் இலவசத் திட்டங்களை எதிர்க்கும் வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக இணைக்க திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஒன்றிய அரசு ஏற்கனவே வெளிநாட்டு கம்பெனிகளுக்கு வரிச்சலுகைகள் வழங்குவதையும் இந்த மனுவில் திமுக சுட்டிக்காட்டி உள்ளது என்பதும் செல்வாக்குள்ள தொழிலதிபர்கள் செலுத்தாத வங்கிகடன்களையும் ஒன்றிய அரசு தள்ளுபடி செய்கிறது என்பதையும் திமுக இந்த மனுவில் சுட்டிக்காட்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: