பெண்களுக்கென பிரத்யேக டுட்டோரியல்!

குடும்பச் சூழல் மற்றும் வறுமை காரணமாக பலர் சிறு வயதிலேயே படிப்பினை பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். இதில் ஆண்கள் டீக்கடை, மெக்கானிக் கடை அல்லது ஓட்டலில் வேலைக்கு சேர்க்கிறார்கள். பெண்களில் பலர் வீட்டு வேலைக்கு செல்ல நேரிடுகிறது. இவர்கள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்க சென்றாலும் குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பாவது தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதற்காக டுட்டோரியலில் சேர்ந்து படிக்கிறார்கள். இதில் 75% பேர் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்.

டுட்டோரியலில் சேர்ந்து படிப்பது ஆண்களுக்கு உகந்ததாக இருந்தாலும் பெண்களுக்கு அவ்வாறு இருப்பதில்லை. காரணம் பாதுகாப்பான சூழல், போய்வர போக்குவரத்து வசதி, விரும்பும் நாளில் வகுப்புகள் என பெண்கள் எதிர்பார்க்கும் வசதிகள் டுட்டோரியல் பயிற்சியில் கிடைப்பதில்லை. பெண்களின் தேவையினை அறிந்து அவர்களுக்காகவே பிரத்யேகமாக கோவை காந்தி புரத்தில் இயங்கி வருகிறது ‘அச்சீவர்ஸ் அகாடமி’ டுட்டோரியல் நிறுவனம்.

இந்நிறுவனத்தின் பொது மேலாளர் சுரேஷ் தர்ஷன் கூறும்போது, ‘‘பெண்களுக்கென பெண் ஆசிரியர்களைக் கொண்டு ஒரு முழு வகுப்பறையை தனியாக ஒதுக்கி வகுப்புகள் நடத்துகிறோம். ஆசிரியர் துறையில் 15 வருடங்களாக அனுபவங்கள் கொண்ட ஆசிரியர்களை நியமித்து இருப்பதால், அவர்கள் பாடங்கள் எளிதாக புரியும் படி கற்றுத் தருகிறார்கள். மாணவர்களின் நிலை கருதி தவணை முறையில் கட்டணம் வசூலிப்பதால், அவர்கள் பெரிய அளவில் சிரமங்களை சந்திப்பதில்லை. மேலும் இல்லத்தரசிகள் மற்றும் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்காகவே ஞாயிறு அன்று, பிரத்யேகமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன’’ என்கிறார் சுரேஷ் தர்ஷன்.

‘‘கல்வியை வியாபாரமாக்கி கொண்ட நிறுவனங்களுக்கு மத்தியில், ஆரம்ப பணம் செலுத்தாமல், தவணை முறையில் கட்டணம் செலுத்துவது திருப்தியடையச் செய்கிறது’’ என்கிறார் டுட்டோரியலில் பயிற்சி பெற்று வரும் பேரூரை சேர்ந்த நித்யா. கவுண்டம் பாளையத்தை சேர்ந்த நீலவேணி என்ற மற்றொரு மாணவி கூறும் போது, ‘‘எங்களை போல் நிறைய பெண்கள் குடும்ப சூழ்நிலைக்காக படிப்பை பாதியில் நிறுத்திவிடுகிறார்கள். இதனால் பல அவமானங்களை சந்தித்து வருகிறோம். அச்சீவர்ஸ் அகாடமி வந்த முதல் நாளே இது நமக்கான இடம் என்பதை முடிவு செய்துவிட்டேன். கண்டிப்பாக தேர்ச்சி பெறுவேன்’’ என்றார்.

‘‘பல டுட்டோரியல் ஏறிட்டேன். எங்கும் என்னால் தேர்ச்சி பெற முடியவில்ைல. காரணம் குடும்ப சூழலுக்கு மத்தியில் எனக்கான நேரம் ஒதுக்க முடியவில்லை. இங்கு அதற்கான நேரம் உள்ளது. இந்த முறை நிச்சயம் ஜெயிப்பேன் என்கிறார் தன்னம்பிக்கையுடன் உக்கடத்தைச் சேர்ந்த பைரோஜா.

Related Stories: