டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்

* பட்டாணி சூப் செய்யும்போது ஒரு தேக்கரண்டி அவலை வறுத்து பொடி செய்து அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால் கெட்டியான சூப் கிடைக்கும்.

* உளுந்துவடை மாவு ரொம்ப நீர்த்துப்போய்விட்டால் அந்த மாவுடன் கொஞ்சம் அவலைக் கலந்து வடை தட்டினால் வடை சுவையாக இருக்கும்.

* கலந்த சாதம், வெஜிடபிள், பிரியாணி போன்றவை பொலபொலவென்று இருக்க குக்கர் மூடியைத் திறந்ததுமே சிறிது எலுமிச்சை சாறைவிட்டுக் கிளறிவிட வேண்டும்.

* பனீரை வெட்டும் கத்தியை சிறிது நேரம் கொதிக்கும் நீரில் போட்டு வைத்திருந்து பிறகு பனீரை வெட்டினால் உடையாமல் உதிராமல் துண்டங்களாக வெட்ட முடியும்.

Related Stories: