கொழுக்கட்டை டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

*கொழுக்கட்டைக்கு மேல் செப்பு செய்ய மாவு தயாரிக்கும்போது மாவை ஒரு கரண்டி எண்ணெய் விட்டு கிளறி கொஞ்சம் ஈரப்பசை இருக்கும்போது கீழே இறக்கிவிட வேண்டும்.

*கொழுக்கட்டை அரிசி மாவு செப்பு செய்யும்போது விரியாமல் இருக்க நெய்யை கையில் தொட்டு தொட்டு மூட வேண்டும்.

*தேங்காய் பூரணம் தயாரிக்கும்போது பல்லு பல்லாக தேங்காய் ஆனால் மிக்சியில் ஒரு சுற்று சுற்றிவிட்டு போட்டால் ஒன்றுபோல இருக்கும்.

*கடலைப் பூரணம் என்றால் கடலைப்பருப்பை ஊறவைத்து அரைத்து கிளறி பிறகு உருட்ட வேண்டும்.

*கொழுக்கட்டை செப்பு விரியாமல் இருக்க ஒரு கரண்டி உளுந்தம் மாவு கலந்து கிளற வேண்டும்.

*கொழுக்கட்டையைப் பிடிக்க கையில் எண்ணெயைத் தடவிக்கொண்டு மாவை அழகாக சொப்பாக விரியச்செய்து மேலே குவித்தால் விரியவே விரியாது.

*கொழுக்கட்டைக்கு பூரணம் செய்யும்போது வெல்லக்கரைசலை வடிகட்டிவிட்டால் மண் கடிக்காது.

*சுண்டல் செய்தால் அதில் கொஞ்சம் கொழுக்கட்டை மாவு செப்பில் வைத்தால் வித்தியாசமான சுண்டல் கொழுக்கட்டை கிடைக்கும்.

*கொழுக்கட்டை தயார் ஆனவுடன் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்தவுடன் கொஞ்ச நேரத்தில் வெல்லத் தண்ணீர் மாதிரி வடிந்தால் அதை குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கலாம்.

*வெல்லப்பூரணம் நன்றாக இறுக வேண்டும். அப்போதுதான் உள்ளே பூரணம் வைக்கும்போது கொழுக்கட்டை விரியாமல் வரும்.

*கொழுக்கட்டை பூரணம் மீதம் இருந்தால் அதையும் போளி போல சப்பாத்தியின் நடுவில் வைத்து செய்து சாப்பிட கொடுக்கலாம். சுவையாக இருக்கும். கொழுக்கட்டை ஆவியில் செய்வதால் உடலுக்கு ஆரோக்கியமானது.

தொகுப்பு: ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

அட்டைப்படம்:  தர்ஷா குப்தா

Related Stories: