2022ம் ஆண்டின் முதல் ராக்கெட் :பிஎஸ்எல்வி - சி52 ராக்கெட் 3 செயற்கைக்கோள்களுடன் பிப்.14-ல் விண்ணில் பாய்கிறது!!

பெங்களூரு : 2022ம் ஆண்டின் முதல் ராக்கெட் வரும் 14ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு தொடர்பாக பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டில் இஓஎஸ்-4 (ரிசாட்-1ஏ) மற்றும் இஓஎஸ்-6 (ஓசோன் சாட்-3) ஆகிய 2 செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி ரக ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக PSLV-C52 ராக்கெட் மூலம் இஓஎஸ்-4 உட்பட 3 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. 1710 கிலோ எடை கொண்ட Risat-1A என்னும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், மாணவர் செயற்கைக்கோளான இன்ஸ்பைர்சாட்-1 மற்றும் தொழில்நுட்ப விளக்கக் செயற்கைக்கோளான ஐஎன்எஸ்-2டிடி ஆகிய 3 செயற்கைகோள்களும்  PSLV-C52 ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி - சி52 ராக்கெட்மூலம் இந்த 21 செயற்கைக் கோள்களும் பிப்.14-ம் தேதி காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்படஉள்ளன.  இந்த ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்ட் டவுன் பிப்ரவரி 13ம் தேதி காலை 4.29 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே Risat-1A செயற்கைக் கோள் புவிவட்டப் பாதையில் 529 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்படும். வேளாண்மை காடுகள் வளம், தாவரங்கள்,  பயிர்கள், மண்ணின் ஈரப்பதம்,வெள்ளம்,  குறித்த துல்லியமான விவரங்களையும் படங்களையும் இந்த செயற்கைக் கோள் அனுப்பி வைக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.ஆகஸ்ட் மாதத்தில்  சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: