இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 கோடி

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று 4 கோடியை தாண்டியது.  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 85 ஆயிரத்து 914 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த ஒரு நாளில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் புதிதாக பாதிக்கப்பட்டோர் புள்ளி விவரங்களை ஒன்றிய சுகாதார துறை அமைச்சகத்தின் அறிக்கை, ‘24 மணி நேரத்தில் புதிதாக 2,85,914 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த தொற்று பாதிப்பு 4,00,85,116 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 665 உயிரிழப்புக்கள் பதிவானதை அடுத்து கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,91,127ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 22,23,018ஆக குறைந்துள்ளது. மொத்த நோய் பாதிப்பில் இது 5.5 சதவீதமாகும். தொற்று பாதிப்பில் இருந்து குணமடைவோரின் சதவீதம் 93.23ஆக குறைந்துள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரில் 13,824 குணமடைந்து சென்றுள்ளனர். தொற்றால் நாள்தோறும் பாதிக்கப்படுவோர் 16.16 சதவீதமாகவும், வாரத்திற்கு 17.33 சதவீதமாகவும் பதிவாகி உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 163.58 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். ஒரு வாரத்தில் 2.1 கோடி பேர் பாதிப்பு: உலக அளவில்  ஜனவரி 17ம்  தேதி முதல் 23ம் தேதி வரையிலான கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 5 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக அளவில் ஒரு வாரத்தில் 2.1 கோடி புதிய பாதிப்பு பதிவாகி உள்ளது.  இதேபோல் ஒரு வாரத்தில் சுமார் 50,000 கொரோனா உயிரிழப்புகளும் பதிவாகி உள்ளது.

* கோவாக்சின், கோவிஷீல்டு விலை ரூ.275 ஆக குறைகிறது

கொரோனாவுக்கு நாடு முழுவதும் தற்போது மக்களுக்கு இலவசமாக போடப்பட்டு வரும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை ஒன்றிய அரசே வாங்கி விநியோகித்து வருகிறத. இவற்றை சந்தையிலும் விற்பதற்கும் கடந்த 19ம் தேதி ஒன்றிய மருந்து தர கட்டுப்பாடு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரை செய்தது. தற்போது, தனியார் மருத்துவமனைகளில் கோவாக்சின் ஒரு டோஸ் ரூ.1200க்கும், கோவிஷீல்டு ரூ.780க்கும் விற்கப்படுகிறது. இதில்ல ரூ.150 சேவை கட்டணமும் அடங்கும். இந்நிலையில், வெளிசந்தையில் இவற்றின் விலை ரூ.275 ஆக குறைக்கப்படும் என்றும், கூடுதல் சேவை கட்டணம் ரூ.150 வசூலிக்கப்படும் என்றும் தெரிகிறது.

Related Stories: