அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசின் நிதித்துறை (அகவிலைப்படி), கடந்த 2022 ஜனவரி 1ம் தேதி வெளியிட்ட அரசாணை எண் 3ல், தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்தில்  இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், அதற்கான தொகையை 1.1.2022 கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படியானது, 1.1.2020 முதல் 31.12.2021 வரை 17 சதவீதமாக கணக்கிட்டு தொடர்ச்சியாக வழங்க வேண்டும் தெரிவிக்கப்பட்டது. அரசு அறிவிப்பின்படி, தமிழகத்தில் பணியாற்றும் ஒன்றிய அரசின் பணியாளர்களுக்கும் 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அகவிலைப்படியை 1.1.2022 முதல் வழங்க வேண்டும் என்றும், 1.1.2020 முதல் 31.12.2021 வரைக்குமான 17 சதவீதத்தையும் இணைத்து வழங்க வேண்டும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தலைமைச் செயலாளர் இறையன்பு தனது அரசாணையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: