சென்னையில் நெடுஞ்சாலை பணிகளின் தரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு நள்ளிரவில் திடீர் ஆய்வு: அளவீடு கருவி வைத்து சோதனையால் பரபரப்பு

சென்னை: சென்னை மாநகரப் பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் பராமரிக்கப்படும்  சாலை பணிகள் தரத்தினை  நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 100  அடி சாலை, ஜிஎஸ்டி சாலை, எண்ணூர் மெயின் ரோடு, வேளச்சேரி மெயின்ரோடு, காமராஜர் சாலை உட்பட 258 கி.மீ நீள சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில்  பெருகி வரும் போக்குவரத்துக்கு ஏற்ப சாலைகளை அகலப்படுத்துவது, புதிதாக பாலங்கள் கட்டுவது, சாலைகளை மேம்படுத்துவது, புதிய சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் போடப்படும் சாலைகள் மில்லிங் செய்து போடப்பட்டிருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் குடியிருப்பு பகுதிகளில் சாலையின் உயரம் அதிகரிக்காத வண்ணம் சாலையை சுரண்டி புதிதாக அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், மில்லிங் செய்து சாலை அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் திடீர் ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், சென்னை ஜிஎஸ்டி சாலையில் கிண்டி ரயில்வே மேம்பாலம் அருகில் அணுகு சாலை செப்பனிடும் பணிகள் ரூ.1.71 கோடி செலவில் நடந்து வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சாலைகளை மில்லிங் செய்து குடியிருப்பு பகுதிகளில் சாலையின் உயரம் அதிகரிக்காமல் பணிகள் சரிவர நடைபெறுகிறதா என்பது குறித்தும், சாலைப் பணிகள் தரத்துடன் போடப்படுகின்றனவா என்பது குறித்தும் ெநடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சாலை 40 மி.மீட்டர் அளவுக்கு தோண்டப்பட்டு (மில்லிங்) உள்ளதா எனவும், புதியதாக போடப்படும் சாலையின் உயரம் 40 மி.மீட்டர் அளவுக்கு கணத்துடன் போடப்பட்டுள்ளதா எனவும், அளவீடு கருவிகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், போடப்பட்டுள்ள சாலையினை துளையிட்டு மதிப்பீட்டில் உள்ளபடி அடர்த்தி, அடர்நிலக்கில் (தார்) மற்றும் உறுதி தன்மை உள்ளதா என்பது குறித்து பரிசோதித்தார்.

Related Stories: