போலீஸ் ஏட்டு மீது ஆட்டோ மோதல்

பெரம்பூர்: வியாசர்பாடி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் தேவமணி. நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி 49வது பிளாக் பகுதியில் குடித்துவிட்டு ஒருவர் தகராறு செய்வதாக தேவமணிக்கு தகவல் கிடைத்தது. அப்போது அங்கு சென்று விசாரணை செய்து கொண்டிருந்தபோது ஆட்டோ ஒன்று தாறுமாறாக வந்தது. அதனை தலைமை காவலர் தேவமணி கை காண்பித்து நிறுத்தச் சொன்னார். அப்போது ஆட்டோவில் இருந்த டிரைவர் ஆட்டோவில் இருந்து கீழே குதித்தார். ஆட்டோ வேகமாக வந்து தலைமை காவலர் மீது மோதியது. இதில் தலைமை காவலர் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தவருக்கும் முன்பக்க பற்கள் உடைந்து நெற்றியில் காயம் ஏற்பட்டது. அவரையும் அருகிலிருந்தவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  புகாரின்படி கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவை ஓட்டி வந்த வியாசர்பாடி ஜே.ஜே.ஆர்.நகர் 1வது தெரு பகுதியை சேர்ந்த செல்வம்(55) என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.

Related Stories: