புதுவையில் ரியல் எஸ்டேட் தரகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மோட்டார் சைக்கிளில் தப்பிய மூவரை கைது செய்தது போலீஸ்

புதுச்சேரி: கைப்பந்து போட்டி நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் ரியல் எஸ்டேட் தரகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மூவரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி அறியாங்குப்பத்தில் வசிக்கும் பாண்டியன் என்பவர் வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் தரகரான பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் இரவில் வீட்டில் தூங்கிகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய அறியாங்குப்பம் அங்குள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதே பகுதியை சேர்ந்த கதிர், சூர்யா, பிரவீன் ஆகிய 3 பேர் குண்டு வீசியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பொங்கல் பண்டிகையை ஒட்டி கைப்பந்து போட்டி நடத்தியதில் இரு அணியினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது எதிரணிக்கு சாதகமாக பேசியதால் பாண்டியன் வீட்டில் குண்டு வீசியதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.          

Related Stories: