ஒரு தம்பதியர் கர்ப்பமடைவதற்கு சிறிது காலம் எடுக்கும் பொழுது அது தாமதமான கருவுறுதல்

தாமதமானக்கருவுறுதல்: சிலருக்கு, பெற்றோராகும் அதிசயம் சற்று தாமதமாக நடக்கிறது: பெற்றோராகும் பயணம் மிகவும் திருப்திகரமான அனுபவமாகும் மற்றும் அது ஒவ்வொரு தம்பதியருக்கும் மாறுபடுகிறது. சிலருக்கு, கருவுறுதலுக்கு சில மாதங்களே ஆகும், வேறு சிலருக்கு சற்று நீண்டகாலமாகலாம். சில காரணங்களால், ஒரு தம்பதியர் கர்ப்பமடைவதற்கு சிறிது காலம் எடுக்கும் பொழுது , அது தாமதமான -கருவுறுதல்  (subfertility ) எனப்படுகிறது. தம்பதியர்களில் பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கை முறைமாற்றங்கள், மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அவர்களுக்கு பெற்றோராகக்கூடிய மகிழ்ச்சியை அளிக்கும் மேம்பட்ட கருவுறுதல் சிகிச்சை தெரிவுகள் பற்றி தெரியாது என்பதால், அவர்கள் பயம், பதட்டம், விரக்தி, குற்ற உணர்வு மற்றும் சங்கடத்தில் வாழ்கின்றனர்.

தாமதமான-கருவுறுதலுக்கான காரணங்கள்:

ஆண் அல்லது பெண் கருவுறுதல் பிரச்சினைகள் கருத்தரிப்பதில் சிரமத்தை உண்டு பண்ணலாம் அல்லது அது சில அறியப்படாத காரணங்களாலும் இருக்கலாம். பெண்களில் தாமதமான கருவுறுதலுக்கு வழிவகுக்கும் நிலைமைகள்:

* கருமுட்டை வெளிப்படுவதில்  பிரச்சினைகள்:

மாதவிடாய் சுழற்சி தொடர்பான பிரச்சினைகள் ஏதும் உள்ள பெண்கள் தாமதமாக கருவுறலாம். எனவே, அவர்களது மாதவிடாய் குறித்த சரியான விழிப்புணர்வு இருத்தல் பெண்களுக்கு மிகவும் அவசியமாகும் மற்றும் அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால்,கருத்தரிப்பு நிபுணரை நாடுதல் அவசியமாகும். கருமுட்டை வெளிப்படுதல்  ஒரு மாதவிடாய் சுழற்சியின்போது நடைபெறுகிறது, இந்தச் செயல்முறையைப் பாதிக்கக்கூடிய காரணங்களில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

* சினைப்பை நோய்க்குறி எனப்படும் (Polycystic ovarian syndrome PCOS )

இக்காலகட்டத்தில் பெண்களில் மிகவும் பொதுவாகக் காணப்படுகிற சினைப்பை நோய்க்குறி (PCOS) என்பது, கருமுட்டை வெளியிடுதலை நிறுத்தக்கூடியதாகும் அல்லது ஒழுங்கற்ற மாதவிடாயை ஏற்படுத்தக்கூடியதாகும்.

* முன்கூட்டிய சினைப்பை பற்றாக்குறை (Premature ovarian insufficiency)

45 வயதுக்குப் பிறகு இறுதிமாதவிடாய் (மாதவிடாய்களின் முடிவு) வருகிறது. ஆனால், சில பெண்களில், 40 வயதுக்கு முன்பே முட்டை உற்பத்தி நின்று விடுகிறது. இந்நிலை முன்கூட்டிய சினைப்பை பற்றாக்குறை என்று அழைக்கப்படுகிறது. மரபணு கோளாறுகள், உடல் ஒவ்வாமை  அல்லது புற்றுநோய் சிகிச்சை  ஆகியவை இதற்கான காரணங்களாக இருக்கலாம்.

* குறைந்துவிட்ட சினைப்பைஇருப்பு (Diminished ovarian reserve)

ஒரு பெண்ணின் சினைப்பையில் இருக்கக்கூடிய முட்டைகளின் எண்ணிக்கை மற்றும் அதன் தன்மை சினைப்பைஇருப்பு என்று குறிப்பிடப்படுகிறது. குறைந்துவிட்ட சினைப்பைஇருப்பு என்பது, சாதாரணமாக, ஒரு பெண், அவளது வயதுக்கேற்ற அளவில் இல்லாமல், எண்ணிக்கையிலும் மற்றும் தன்மையிலும் குறைந்து இருப்பதை குறிக்கிறது. நுண்ணறை தூண்டும் ஹார்மோன் FSH அளவு மற்றும் இரத்தத்தில் உள்ள ஈஸ்டிரோடியோலின் அளவை சோதிப்பதன் மூலம்  சினைப்பைஇருப்பை கண்டறியலாம் .

* கருமுட்டைக்குழாய் அடைப்பு:

கருமுட்டைக்குழாய் என்பது, முட்டையும் விந்துவும் சந்தித்து, கருத்தரித்தல் நடைபெறும் இடமாகும். இந்தக்குழாயில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால், அது கருவுறுதல் பிரச்சினைகளுக்கு காரணமாகும்.

கருமுட்டைக்குழாய் அடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:

* பெல்விக் இனபிலம்மாட்டோரி pelvic inflammatory disease

* கருப்பை அகப்படலம் endometriosis

கருப்பை சார்ந்த அசாதாரண நிலைமைகள்:

கருப்பை என்பது, கருஉட்பொருத்தப்பட்டு, குழந்தை வளரத்தொடங்கும் இடமாகும். கருப்பையில் உள்ள எந்தவொரு குறைபாடும், கருவுறாமை பிரச்சினைகளுக்கு காரணமாகும்.

கருப்பை சார்ந்த அசாதாரண நிலைமைகளில் சில:

* இடைச்சுவருள்ள கருப்பை septate uterus

* இரட்டை கருப்பை டபுள் double uterus

*  கருப்பை சார்ந்த நார்த்திசுக்கட்டிகள் fibroids

பெண்களில் ஏற்படும் தாமதமான  கருவுறுதலைக் கண்டறியும் முறைகள் :

உடல்பரிசோதனை மூலமாகவும், வேறு பல சோதனைகள் மூலமாகவும், தாமதமான கருவுறுதலைக் கண்டறியலாம்.

* Transvaginal ஸ்கேன் என்படும் கர்ப்பப்பை வாய்வழிமூலம் கருமுட்டையின் எண்ணிக்கை , கருப்பை,மற்றும் கருக்குழாய்களை கண்டறியலாம்.

* HSG மற்றும் SSG  மூலமாக கருக்குழாய் திறந்திருக்கிறதா மற்றும் கருப்பைக் குழி சாதாரணமாக உள்ளதா என்று சரிபார்ப்பதற்கு இந்த நடைமுறை பயன்படுத்தப்படுகிறது.

* முட்டைகளின் எண்ணிக்கையை சரிபார்ப்பதற்கு ஏ.எம்.எச். (Anti Mullerian Hormone AMH )  ரத்த சோதனை செய்யப்படுகிறது.

ஆபத்துகாரணிகள்: (பெண்கள்)

* 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்

* உடல் பருமனாகவோ அல்லது எடை குறைவாகவோ இருத்தல்

* புகைபிடித்தல் மற்றும் அளவுக்கு அதிகமாக மது அருந்துதல்

* வேதிச்சிகிக்சை அல்லது கதிரியக்கச் சிகிச்சை போன்ற புற்றுநோய் சிகிச்சைகள்

* குடும்பத்தில் யாரேனு முன்கூட்டிய இறுதி மாதவிடாய் / கருப்பை அகப்படலம் கொண்டிருந்தால்  

* கதிர்வீச்சு மற்றும்  பூச்சிக்கொல்லிகள் போன்ற நச்சு இரசாயனங்களுடன் தொடர்பு கொண்டிருந்தால்

பெண்களில் தாமதமாக ஏற்படக்கூடிய கருவுறுதலுக்கான சிகிச்சைகள்:

உடல் பருமனை  பராமரித்தல், ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ளுதல், புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதலை விட்டுவிடுதல், மற்றும் உடற்பயிற்சி செய்தல் போன்ற  சிறந்த வாழ்க்கை முறைமாற்றங்கள் இயற்கையாகவே கருவுறுதலுக்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும். பெண்களில் தாமதமானக் கருவுறுதலை மருத்துவமுறையில் கையாள்வதில், மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல், ஐ.யூ.ஐ. (கருப்பைக்குள் கருவூட்டல்), சிறிய கருப்பை அறுவை சிகிச்சைகள் ஆகியவையும் அடங்கும். சினைப்பை நோய்க்குறியுடைய, கருமுட்டை வெளியேறாமல் உள்ள பெண்களுக்கு, தாமதமானக் கருவுறுதலில் இருந்து வெற்றி பெற்று தாய்மையை அடைவதற்கு, ஐ.வி.எஃப் (IVF ), ஐ.சி.எஸ்.ஐ (ICSI) போன்ற மேம்பட்ட கருவுறுதல் சிகிச்சைகளும் பயன்படுத்தப்படலாம்.

ஆண்களில் தாமதமாகக் கருவுறுதலுக்கு வழிவகுக்கும் நிலைமைகள்:

விந்தணு செயல்பாடு, உற்பத்தி மற்றும் விந்தணு வெளிவருவதில்  உள்ள பிரச்சினைகள் தாமதமானக் கருவுறுதலுக்கு வழிவகுக்கும். பாலியல் செயல்பிறழ்ச்சி மற்றும் நீரிழிவுநோய், புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள், எச்.ஐ.வி., மரபணுக் கோளாறுகள் ஆகியவை சாத்தியமான காரணங்களாகும். புகைப்பிடித்தலும் கருவுறுதலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஆண்களில் தாமதமாக  ஏற்படக்கூடிய கருவுறுதலை கண்டறிதல்:

* விந்தணு பரிசோதனை (விந்தணு எண்ணிக்கை, வடிவம் மற்றும் இயக்கம் பரிசோதனை செய்யப்படுகிறது)

* விந்தகத்தில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்பதைக் கண்டறிய, டாப்ளர் ஸ்கேன் சோதனை செய்யப்படுகிறது.

* மரபணு பரிசோதனை  எனப்படும் , Y-chromosome microdeletion screening, CFTR mutation testing) பயன்படுத்தப்படுகிறது மற்றும் குறைந்த அளவு விந்தணு எண்ணிக்கை கொண்ட ஆண்களுக்கும்  இவை  செய்யப்படுகிறது.

* விரைவிதை திசுப்பரிசோதனை மூலமாக விந்தணு உற்பத்தி மற்றும் வளர்ச்சியில் பாதிப்பு அத்தானும் இருக்கிறதா என்று கண்டறியலாம் ). ஐ.வி.எஃப்/ ஐ.சி.எஸ்.ஐ-க்கான விந்தணுக்களை மீட்டெடுக்கவும் இது செய்யப்படலாம்.

ஆபத்துகாரணிகள்: (ஆண்கள்)

* புகைப்பிடித்தல் மற்றும் அதிகளவில் மது அருந்துதல்

* வேதிச்சிகிச்சை அல்லது கதிரியக்க சிகிச்சை போன்ற புற்றுநோய் சிகிச்சைகள்

ஆண்களில் தாமதமாக ஏற்படக்கூடிய கருவுறுதலுக்கான சிகிச்சைகள்:

முக்கியமாக ஓ.ஏ.டி. (ஆலிகோஅஸ்தினோடெராடோஜுஸ்பெர்மியா-குறைவான விந்தணு எண்ணிக்கை, மோசமான ஊர்ந்துபோகும் தன்மை , மற்றும் அசாதாரண விந்தணு வடிவம்)-யின் காரணமாக ஆண்களில் ஏற்படும் தாமதமானக் கருவுறுதலை மருத்துவமுறையில் கையாள்வதில், வெரிகோசெலக்டோமி, TESA, மைக்ரோ-TESE முதலியன அடங்கும். சில தம்பதியர்களுக்கு பெற்றோராகும் மகிழ்ச்சி சற்று தாமதமாகவருகிறது, நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியமில்லை!

டாக்டர் வசுந்தரா ஜெகநாதன் ( Oasis fertility Center)

Related Stories: