நெல்லிக்குப்பம் ஊராட்சியில் நாய்கள் தொல்லை: பொதுமக்கள் அச்சம்

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் நெல்லிக்குப்பம் ஊராட்சிஅம்மாப்பேட்டை கிராமத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பை ஒட்டி வயல்வெளியும், மற்றொருபுறம் தனியார் மருத்துவ கல்லூரியும் உள்ளது. இதனால், புதிய வீட்டுமனைப்பிரிவுகள், கடைகள் உருவாகியுள்ளன. இங்கிருந்து வெளியேற்றப்படும் உணவு கழிவுகளை உண்ண பல இடங்களில் இருந்து நாய்கள் கூட்டமாக வருகின்றன. இதுபோன்று இங்கு வரும் நாய்கள், உணவுக்காக சண்டையிட்டு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செல்லும் பெண்கள், குழந்தைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

கடந்த 2 மாதங்களுக்கு முன் ஒரு சிறுமியை, நாய்கள் துரத்தியதில் அவர் கீழே விழுந்து லேசான காயங்களுடன் தப்பினார். இந்த சம்பவத்தில் இருந்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள் நாயை பார்த்தாலே ஓட்டம் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, நெல்லிக்குப்பம் ஊராட்சி நிர்வாகம், கிராமத்தில் உள்ள நாய்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி இனப்பெருக்கத்தை தடை செய்தல், நாய்களுக்கு வெறிநாய்க்கடி ஊசி செலுத்துதல் ஆகியவை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: