அழுவதற்கு என்றே தனி அறை உருவாக்கம்: ஸ்பெயினில் அறிமுகம்

மாட்ரிட்: அழுவதற்கு என்றே தனி அறையை ஸ்பெயினில் உருவாக்கி இருக்கிறார்கள்.  துன்பம் வரும் போது சிரிங்க என்று வள்ளுவர் சொல்லியிருக்கலாம். ஆனால் யாருக்கு அப்படி சிரிப்பு வரும். சிலர் துன்பம் வரும் போது கண்ணீர் விடாமல் அழுகையை அடக்கி வைப்பார்கள். இப்படி இருப்பவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். மன பாரம் இறங்க வேண்டுமென்றால் அழுகை என்பது சிறந்த வடிகால். எனவே, கவலை இருந்தால் அழுது தீர்த்துவிட வேண்டும் என்பது மனநல மருத்துவர்களின் ஆலோசனையாக உள்ளது.

இந்நிலையில், கவலை மற்றும் மனநல பிரச்னை உள்ளவர்கள் தங்கள் கவலையை சொல்லி அழுவதற்கும் ஆறுதல் பெறுவதற்கும் ஸ்பெயினில் தனி அறை உருவாக்கி இருக்கிறார்கள். ‘அழுகை அறைக்கு வரவேற்கிறோம்’ என்ற வாசகத்துடன் வரவேற்கிறார்கள். ஸ்பெயினில் உள்ள மாட்ரிக் நகரில் அமைந்துள்ள இந்த அறை மனநல பாதிப்பு அதிகரித்து தற்கொலை முடிவை தேடிக்கொள்பவர்களை காப்பாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உளவியல் மருத்துவர் உள்பட மனச்சோர்வடையும் போது அழைக்கக்கூடிய நபர்களின் பெயர்கள் அவர்களது தொலைேபசி எண்கள் உள்ளன. விரக்தியில் உள்ளவர்கள் அவர்களை தொடர்பு கொண்டு ஆறுதல் பெற வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த அறைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: