செவ்வாய் கிரகத்தில் நீர்நிலை இருந்ததற்கான கூடுதல் ஆதாரம் : ஆற்றுப் படுகையின் துல்லிய புகைப்படம் மூலம் நாசா உறுதி!!

வாஷிங்டன் : செவ்வாய் கிரகத்தில் உள்ள ஆற்றுப் படுகையின் துல்லிய புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் கிடைத்துள்ள இந்த புகைப்படம் செவ்வாயில் நீர்நிலை இருந்ததற்கான ஆதாரத்தை வலுப்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்கு கடந்த பிப்ரவரி மாதம் பெர்சவரன்ஸ் ரோவர் என்ற பெயரில் விண்கலத்தை நாசா அனுப்பியது. சுமார் 7 வாரங்கள் பணம் செய்து செவ்வாயை அடைந்த பெர்சவரன்ஸ் பல்வேறு புகைப்படங்களை அனுப்பி வருகிறது.

இந்த நிலையில் ezero என்ற பள்ளத்தாக்கில் இருந்து தற்போது அனுப்பி உள்ள ஆற்றுப் படுகையின் துல்லிய புகைப்படங்கள் செவ்வாயில் நீர்நிலைகள் இருந்ததற்கான ஆதாரத்தை வலுப்படுத்தியுள்ளன. இந்த புகைப்படங்கள் புதையுண்ட ஏரி உருவாக்கிய ஆற்றுப்படுகையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆற்றுப் படுகையின் கீழே உள்ள 3 அடுக்குகளின் வடிவங்கள் நீர் தொடர்ந்து ஓடியதை உறுதிப்படுத்தியுள்ளன. இதனால் சுமார் 370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயில் நீர் சுழற்சி இருந்திருக்கலாம் என்றும் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆற்றுப் படுகையின் புகைப்படங்கள் புவி எல்லையை ஒட்டி இருப்பதாக நாசா கூறியுள்ளது. ஆற்றுப படுகையை கடந்து புதையுண்ட ஏரியின் கரையை மற்றும் பள்ளத்தாக்கின் விளிம்புகளை ரோவர் புகைப்படங்களாக எடுத்து அனுப்ப உள்ளது. அதன் முடிவில் செவ்வாய் குறித்து கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories: