தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் ஆக.3 வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக ஆக.3 வரை கோவை, நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆக. 1,2,3 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் இதர பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நீடிக்கும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்; சில இடங்களில் மழை பெய்யும். வங்கக்கடலில் தென்மேற்கு, தென்கிழக்கு இலங்கை பகுதிகளில் இன்று பலத்த காற்று வீசக்கூடும். இன்றும், நாளையும், வங்கக்கடலில் வடமேற்கு, மத்திய பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது.

அரபிக்கடலின் ஆக.3-ம் தேதி வரை கர்நாடக கரையோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். அரபிக்கடலின் தென்மேற்க, வடக்கு, மத்திய பகுதிகளில் ஆக.3 வரை பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் 4 நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Related Stories: