முக்கிய செய்தி இந்தியா ஜம்மு காஷ்மீர் மாநிலம் முனாந் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை: தேடுதல் வேட்டை தீவிரம் Jul 25, 2021 ஜம்மு காஷ்மீர் மாநில முனன் ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாவட்டம் குல்காம் மாவட்டத்தில் உள்ள முனாந் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் இன்னும் கண்டறியவில்லை என பாதுகாப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். குல்காம் மாவட்டத்தில் உள்ள முனாந் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் அந்த இடத்தை சுற்றி பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளனர். எனவே அவர்கள் பதிலடி கொடுக்கும் விதமாக பய்கரவாதிகளை நோக்கி பாதுகாப்பு படையினரும் சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளான். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது. அப்பகுதியில் வேறு யாரேனும் பதுங்கியுள்ளார்களா? என பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு உள்ள மக்களை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தல் செய்துள்ளனர். குல்காம் மாவட்டம் முனாந் பகுதி முழுவதையும் பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை
நாடாளுமன்ற 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது; 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு: ராகுல், சசிதரூர், டி.கே.சுரேஷ் தொகுதிகளுக்கும் நடக்கிறது
பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
முகூர்த்த தினம், வார இறுதிநாளை முன்னிட்டு விழுப்புரம் கோட்டம் சார்பில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழகம்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான தகவல் பரப்புவதா? நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கிறேன் : பிரதமருக்கு கார்கே கடிதம்!!
மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்.. 170 செல்போன்களை பயன்படுத்தியுள்ளார் : அமலாக்கத்துறை விளக்கம்
பெண்களின் தாலிக்கு ஆபத்து… பெண்களுக்கு வழங்கப்படும் தாய் வீட்டு சீதனத்தை பறிக்க காங்கிரஸ் திட்டம் : பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை பேச்சு
பிரதமர் மோடிக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்ப தைரியம் இல்லை… பாஜகவின் பி டீம் ஆனது தேர்தல் ஆணையம் என காங்கிரஸ் விமர்சனம்!!
தமிழ்நாட்டில் தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு? அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை
தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தலைவர்
ஏப்ரல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வி துறை தகவல்
மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு : பாஜக தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி!!
ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகளில் கோட்டக் மகேந்திரா வங்கி பங்குகளின் விலை கடும் சரிவு
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் : அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜர்!!