முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரம் திமுக ஆட்சி அமைந்தவுடன் தவறுசெய்தவர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின்வாரிய தலைமை நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்து, அனல் மின் நிலையத்தில் சாம்பல் கழிவுகள் வெளியேற்றப்படும் பகுதி மற்றும்  அனல் மின்நிலைய விரிவாக்க கட்டுமான பணிகளை பார்வையிட்டனர். பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:  கடந்த அதிமுக ஆட்சியில் அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்படாததால் ஒரு மாதத்திற்கும் மேலாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது பராமரிப்பு பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு மின் உற்பத்தித்திறன் உள்ள அளவிற்கு முழுமையான மின் உற்பத்தி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏதும் இல்லை. 2016ல்இருந்த சொத்து 2021ல் உள்ள சொத்து மதிப்பின் அடிப்படையில் சோதனை செய்கின்றனர். தவறு செய்தவர்கள் மீது திமுக ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் திமுக அறிவித்தது. அதன்படி தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இதில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை.

Related Stories: