நிலப்பிரச்னை நீடித்து வரும் நிலையில் கோயில் நடை பாதைக்காக நிலம் தந்த மசூதி நிர்வாகம்: நல்லிணக்கத்திற்கு ஓர் அடையாளம்

வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலும், ஞானவாபி மசூதியும் அருகருகே அமைந்துள்ளன. முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் காசி விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாகவும், அந்த நிலம் கோயிலுக்கு சொந்தமானது எனவும் வாரணாசி நீதிமன்றத்தில் வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தொல்லியல் துறையின் நிபுணர் குழு ஆய்வு நடத்தி அறிக்கை தர உத்தரவிட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில், கோயிலின் நுழைவு வாயிலை விரிவுபடுத்தி நடைபாதை அமைப்பதற்காக, ஞானவாபி மசூதி நிர்வாகம் 1,700 சதுர அடி நிலத்தை பரிசாக தருவதாக அறிவித்துள்ளது. அதற்கு பதில் பரிசாக கோயில் நிர்வாகம் தரப்பில் 1,000 சதுர அடி நிலம் வழங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இது இரு மத தலைவர்கள் ஒப்புதலுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.  இது குறித்து அஞ்சுமன் இன்திஜாமியா மசாஜித் நிர்வாகி யாசின் கூறுகையில், ‘‘இந்த நில பரிமாற்ற ஒப்பந்தம் 2 ஆண்டுகளுக்குப்பின் வெற்றி அடைந்துள்ளது. இதற்கும் நீதிமன்ற விசாரணைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த நிகழ்வு சமூக நல்லிணக்கத்திற்கான ஒரு செய்தியாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்,’’ என்றார்.

Related Stories: