சவாலே சமாளி!

நன்றி குங்குமம் தோழி

வாழ்க்கையில் சாதிக்க துடிக்கிறீங்களா? இவங்க சொல்றதை படிங்க!!

சமீபத்தில் பெங்களூரூ இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்டில் பெண்களின் தலைமை சார்ந்த உச்சி மாநாடு நடந்தது. இதில் இரண்டு பிரபலங்கள் கலந்து கொண்டு பெண்கள், தலைமை பண்புகளை பெற்று எதையும் சமாளிக்க பழக வேண்டும் என்பதை மிக அழகாக கூறினர்.

1) ஐ.ஜி. டி.ரூபாமவுட்கில்.

2) டெசி தாமஸ்.

ஐ.ஐி. ரூபாதான் சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்படும் சலுகைகளை கண்டுபிடித்து ஊர் அறியச் செய்தவர்! பலன் அவர் ஹோம்கார்ட் மற்றும் சிவில் டிபென்ஸ்க்கு மாற்றப்பட்டார். இந்த ரூபா தான், அவரின் கல்லூரி பருவத்தில் ஆண்களால் அவருக்கு நேர்ந்த கிண்டல் பற்றி கூறினார். ‘‘நான் படித்த கல்லூரி ஆண், பெண் இருவரும் சேர்ந்து படிக்கும் கல்லூரி. அதனால் என்னுடைய பேட்ச் மேட்டுகளில் ஆண்களும் இருந்தனர். பெண்களுடன் சேர்ந்து படித்தாலும் அவர்களுக்கு பெண் இனத்தின் மேல் பெரிய அபிப்பிராயம் கிடையாது.

ஒரு நாள் என் வகுப்பு சக மாணவர் என்னிடம், ‘நல்லாபடிப்பீங்க... நிறைய மார்க் வாங்கி பாஸ் செய்வீங்க.. அதை வைத்து, எல்லா இடங்களிலும் வேலையும் வாங்கிடுவீங்க..! ஆனால் உங்களிடம் அனுபவமே இருக்காது! சிவில் சர்வீசிலும் எளிதில் வேலை பெற்றுடுவீங்க. ஆனால் அங்கு எழும் பிரச்னைகளையும் சவால்களையும் உங்களால் சமாளிக்க முடியுமா? நிச்சயம் முடியாது’ என்றார்.

நான் அவரின் பேச்சுக்கு பிடி கொடுக்காமல், ‘ஆண்கள் என்ன செய்கிறார்களோ.. அதை நாங்களும் செய்வோம்... எங்களாலும் முடியும்’’ என பதில் கொடுத்தேன். உடனே அவரால் மறு பேச்சு பேச முடியாமல் வாயை மூடிக் கொண்டார். பெண்ணை பெற்றவர்களுக்கு நான் சொல்லுவது இது தான். ‘‘பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பணியில் செயல்படாதீர்கள்..! அவர்களே பிரச்சனைகளை சந்திக்கவும், எதிர் கொண்டு சமாளித்து வெற்றி பெற பழகுங்கள். அவள் வழியில் செயல்படவிடுங்கள்’’ என்றார் ரூபா.

அக்னி புத்ரி என செல்லமாக அழைக்கப்படும் ஏரோனாட்டிகல் சிஸ்டம்ஸ், டிபன்ஸ் மற்றும் டெவலப்மென்ட் அமைப்பின் இயக்குனராக இருப்பவர் ஜெனரல் டெசிதாமஸ்! அக்னி ஏவுகணை தயாரிப்பு, வடிவமைப்பு துவங்கப்பட்ட நாளில் இருந்து அதில் பணிபுரிந்தவர். அக்னி 1 ஐ உருவாக்கியதில் முக்கிய பங்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமுக்கு உண்டு! அவருடைய தலைமையின் கீழ் பணிபுரிந்தவர் டெசி தாமஸ். ‘‘விஞ்ஞானியாக ஆசைப்பட விரும்புபவர்கள் நேற்று இன்று நாளை என அனைத்து தொழில்நுட்பங்களையும் தெரிந்து கொள்ளணும்.

எதிர் வரும் பிரச்சனைகளை கண்டு பயப்படாமல், அதை சமாளித்து, தன்னம்பிக்கையுடன், செயல்பட வேண்டும். மற்றவர்களை புரிந்து கொண்டு அவர்களின் மனநிலைக்கு ஏற்ப செயல்பட்டு, சாதிக்கும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்’’ என்று மாணவிகளுக்கு அறிவுரை கூறினார் அக்னி புத்ரி.

- ராஜி ராதா, பெங்களூர்.

Related Stories: