கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேரு ஸ்டேடியத்துக்கு மாற்றம்: ஐகோர்ட்டில்அரசு தகவல்

சென்னை: ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை கூட்ட நெரிசல் காரணமாக நேரு ஸ்டேடியத்துக்கு மாற்றம் செய்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான விஷயங்கள், தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆகியவை குறித்து உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வரும் வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தம் ஆஜராகி, ரெம்டெசிவர் மருந்தின் தேவை அதிகரித்துள்ளது. தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவமனை அருகில் இந்த மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏராளமானோர் தினமும் ரெம்டெசிவிர் மருந்துக்காக காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெம்டெசிவிர் விற்பனையை சென்னை கீழ்ப்பாக்கத்திலிருந்து  நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு மாற்றியுள்ளோம். அங்கு கூடுதல் கவுண்டர்களுடன் ரெம்டெசிவிர் விற்பனை மையம் செயல்படும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை வரும் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: