ரேஷனில் கொரோனா நிவாரணப் பொருட்களாக 13 மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்க தமிழக அரசு திட்டம்

சென்னை: ரேஷனில் கொரோனா நிவாரணப் பொருட்களாக 13 மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்க தமிழக அரசு திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக இன்றைக்கு ஒரு டெண்டர் விடப்பட்டுள்ளது. கோதுமை 1 கிலோ, உப்பு 1 கிலோ, ரவை 1 கிலோ, சர்க்கரை 500 கிராம், உளுந்தம் பருப்பு 500 கிராம், புளி 250 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், குளியல் சோப்பு 1, துணிதுவைக்கும் சோப்பு 1, மிளகு சீரகம் உட்பட கிட்டத்தட்ட 13 வகையான பொருட்களை கொள்முதல் செய்வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

இதன் மூலமாக இந்த 13 பொருட்களும் வரக்கூடிய ஜூன் 3ஆம் தேதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் 2000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டெண்டர் மூலம் 19ஆம் தேதிக்குள் கொள்முதல் செய்யப்பட்ட பிறகு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கிட்டத்தட்ட தமிழகத்தை பொறுத்தவரை 2.11 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த 13 பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: