சீர்காழி அருகே கொண்டத்தூர் கிராமத்தில் பாய் நாற்றங்காலில் விதைப்பு பணி: வேளாண் அதிகாரி ஆய்வு

சீர்காழி: சீர்காழி அருகே கொண்டத்தூர் கிராமத்தில் விவசாயி செல்வராசு வயலில் குருவை பாய் நாற்றங்கால் விதைப்பு பணியை நாகப்பட்டினம் வேளாண்மை இணை இயக்குனர் பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தரமான சான்று விதைகளை பயன்படுத்துதல், உயிர் உரங்கள் நேர்த்தி செய்து விதைப்பு செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். தொடர்ந்து வைத்தீஸ்வரன்கோயில் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்.

பிறகு சீர்காழி வேளாண்மை விரிவாக்க மையத்தில் குறுவை சாகுபடிக்கு சான்று விதை நெல் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவசாயிகளுக்கு விதை நெல் தடையின்றி வழங்கவும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தினார். அப்போது சீர்காழி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன், வேளாண்மை அலுவலர் சின்னண்ணன், துணை வேளாண் அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: