திருவான்மியூரில் அடுக்குமாடி குடியிருப்பில் மது விற்பனை: ஒருவர் கைது

துரைப்பாக்கம்: திருவான்மியூரில் அடுக்குமாடி குடியிருப்பில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை அடையாறு காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் கள்ளமார்க்கெட்டில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின்படி, எஸ்.ஐ. செல்வகுமார், ஏட்டுக்கள் வெங்கடேசன், சங்கர், முதல் நிலை காவலர்கள் சண்முகம், பூர்ணகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் திருவான்மியூர் பகுதியில் கண்காணித்தனர்.

அப்போது திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மதுபாட்டில்கள் பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மது விற்பனை செய்ததாக ரவிச்சந்திரனை(49) கைது செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘’வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் பாதிக்கப்பட்டதால் மதுபாட்டில்களை குடியிருப்பில் பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ரவிச்சந்திரனை  சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 30 பாட்டில் உயர்ரக மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: