ஆப்(App)பிலும் சமைக்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

செல்லும் இடத்துக்கு வழி தெரியலையா? அதற்கென தனி ஆப் உள்ளது. நாம் பேசுவதை பதிவு செய்ய தனி ஆப். ஏன் ஊருக்கு போக ரயில் மற்றும்  பஸ் டிக்கெட்டுகள் புக் செய்யவும் ஆப்கள் வந்துவிட்டன. இந்த வரிசையில் சமையல் செய்வதற்கும் ஆப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக  திருமணமான பெண்களுக்கு இந்த ஆப்கள் ஒரு வரப்பிரசாதம்.

Indian  recipes with  photo  offline

இந்திய உணவுகள் பல்வேறு பிராந்திய உணவு வகைகளை உள்ளடக்கியது. மண்ணின் வளம், காலநிலை, வேலைவாய்ப்புகள் மற்றும் அங்கு  விளையும் மசாலா பொருட்கள், காய்கறிகள் கொண்டு ஒவ்வொரு உணவு சமைக்கும் முறைகள் மாறுபடும். இந்தியன் ரெசிபி வித் போட்டோ  அஃப்லைன் app மூலம் நீங்கள் வீட்டிலே இந்திய பாரம்பரிய உணவுகளை தயாரித்து அசத்தலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்  உங்க சமையலை சாப்பிட்டு ஒரு சபாஷ் போடுவார்கள். இந்த app பயன்படுத்த இன்டர்நெட் அவசியம் இல்லை.

அதனால் நீங்கள் விரும்பும் ரெசிப்பிக்களை எப்ேபாது வேண்டும் என்றாலும் சமைத்து சுவைத்து மகிழலாம். சிறுதானிய உணவுகள், கோதுமை மற்றும்  அரிசி சார்ந்த உணவுகள் மற்றும் பயறு வகைகள் என பல வகை உணவுகள் இதில் அடங்கும். நீங்கள் விரும்பும் ரெசிப்பிக்களை டவுன்லோடும் செய்து  கொள்ளலாம். சைவம் மட்டும் இல்லாமல் அசைவ உணவுகளும் இதில் அடங்கும். மேலும் நாம் அன்றாடம் அஞ்சறைப் பெட்டியில் பயன்படுத்தும்  மிளகு, வெந்தயம், சீரகம், பெருங்காயம், தனியா, இஞ்சி கொண்டு பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் உணவுகளின் ரெசிப்பிக்கள் இந்த appபில்  உள்ளது. பார்த்து சமைத்து மகிழுங்கள்.

Veganized - Vegan Recipes, Nutrition, Grocery List

உடல் எடை குறைய பலவிதமான டயட் உணவு முறைகளை நாம் பின்பற்றி வருகிறோம். அந்த வரிசையில் இப்போது பிரபலமாக இருப்பது வேகன்  உணவுகள். இந்த ஆப் (app)பில் பல விதமான வேகன் உணவுகளை சமைக்கும் முறை பற்றிய விவரங்கள் குறிப்பிட்டுள்ளது. இதில் இருக்கும்  ரெசிப்பிக்களை நாம் செய்து பார்க்கலாம். நமக்கு தெரிந்த வேகன் ரெசிப்பிக்களை பதிவும் செய்யலாம். வேகன் உணவில் உங்களுக்கு தேவையான  அனைத்து ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் ஒவ்வொரு உணவில் உள்ள ஊட்டச்சத்து குறித்த விவரங்கள் இந்த appல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு காய்கறிகளில் இருக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் குறித்த தகவல்களையும் இதில் சரி பார்க்கலாம். ஒருவர் வேகன் ரெசிப்பிக்களை  இதில் பதிவு செய்யும் போது, அது குறித்த விவரங்கள் அனைத்தும் தானாக இதில் பதிவாகிவிடும். பதிவு செய்யப்படும் ரெசிப்பிக்கள் குறித்து  மற்றவர்கள் தங்களின் கருத்துக்களையும் தெரிவிக்கலாம். உங்கள் வயது, பாலியல், எடை போன்றவற்றை கணக்கில் கொண்டு வேகன் உணவுகளை  பின்பற்றுபவர்களுக்கு அன்றை தினம் மூன்று வேளை என்ன உணவினை சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கப்படும்.

வேகன் உணவுகள் தயாரிக்க என்ன பொருட்கள் தேவை என்றும் தனிக்குறிப்பு தருவதால், ஷாப்பிங் பட்டியலை எளிதாக திட்டமிடலாம். 300க்கும்  மேற்பட்ட தேவையான பொருட்கள் வழங்குவதோடு புதியவற்றை சேர்க்கவும், உங்கள் சொந்த உணவை உருவாக்கவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து  கொள்ளவும் முடியும். மூலப்பொருட்கள் குறித்த விவரங்களையும் கேட்டு தெரிந்து  கொள்ளலாம். ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலி, போர்ச்சுகல்  மற்றும் ஸ்பானிஷ் மொழியில் ரெசிப்பிக்கள் உள்ளன.

Tasty

இந்த app உங்கள் புதிய சமையல் பயிற்சியாளர். 3000 க்கும் மேற்பட்ட படிப்படியான செய்முறை விளக்கங்களோடு சுவையான சமையல் குறிப்புகள்  இப்போது உங்கள் விரல் நுனியில். இதை உங்கள் கைபேசியின் சின்ன சமையல் குறிப்பு புத்தகம் என்று கூட சொல்லலாம். இதில் நீங்கள் உங்களுக்கு  பிடித்தமான சமையல் குறிப்புகளை உணவு வகை மற்றும் பெயர் கொண்டு தேடலாம். ஒவ்வொரு உணவு குறிப்புக்கும் படிப்படியான செய்முறை  விளக்கமுண்டு. அன்றைய தினம் மற்றும் விடுமுறை நாட்களின் அடிப்படையில் உங்கள் உணவு குறித்த ஆலோசனை பரிந்துரை அளிக்கப்படும்.  உங்களுக்கு பிடித்த உணவு குறிப்புகளை நீங்கள் பிற்காலத்தில் பார்க்க, சேமித்து வைக்க முடியும்.  

Veg Menu

சைவ உணவு மற்றும் வேகன் உணவுகள் வேண்டுமா? வேகமாக சமைக்கும் முறைகள்,  ருசியான, இத்தாலிய உணவுகள் வேண்டுமா? VegMenu  நிறைய உணவுகளை உங்களுக்காக வழங்குகிறது. இதில் ஆப்படைசர்கள் முதல்  சாலட்,  சைட் டிஷ்கள், மெயின் கோர்ஸ் உணவுகள், கேக்,  குழந்தைகளுக்கான உணவுகள், டோஃபூ உணவுகள் என பல வகையான உணவுகளின் பட்டியல்கள் உள்ளன. சைவம் அல்லது வேகன் உணவுகள்  குறித்த குறிப்புகளை இலவசமாக இதில் தரையிறக்கம் செய்து கொள்ள முடியும்.

இத்தாலி உணவுகளை சைவம் மற்றும் வேகன் முறையில் எவ்வாறு சமைக்கலாம் என்ற குறிப்பும் உள்ளது. படிப்படியான செயல்முறை  விளக்கங்களும் உள்ளன. அது தவிர விசேஷ நாட்களான புத்தாண்டு, திருவிழா, கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற பண்டிகையின் போது செய்யப்படும்  விசேஷ உணவுகள் பற்றி குறிப்பும் இதில் உள்ளன. இப்போது எல்ேலாரும் உணவில் மிகவும் கவனம் செலுத்துவதால், ஒருவரின் டயட்டுக்கு ஏற்ற  உணவு பற்றிய விளக்கங்கள் மற்றும் விவரங்களும் இதில் குறிப்பிட்டுள்ளது.

My CookBook (Recipe Manager)

ஒரே  இடத்தில் உங்களுக்கு பிடித்த அனைத்து சமைல் குறிப்புகளையும் சேகரிக்க உதவும் app. உங்கள் சொந்த டிஜிட்டல் சமையல் புத்தகத்தை  இந்த app மூலம் உருவாக்கலாம். உங்களின் தனிப்பட்ட சமையல் குறிப்பு மட்டும் இல்லாமல் மற்ற புதிய உணவுகள் பற்றிய குறிப்புகளையும் இதன்  மூலம் கண்டறியலாம். அந்த குறிப்பினை உங்களின் சமையல் புத்தகத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் அந்த உணவு குறித்த  விவரங்களை எங்கு வேண்டும் என்றாலும் பார்க்க முடியும்.

உங்களுக்கு பிடித்த உணவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா? அவர்களை இந்த appப்பில் இணைய செய்யலாம்.  அல்லது முகநூலில் கூட பகிரலாம். இந்த appபை உங்களின் கைபேசியில் தான் பயன்படுத்த முடியும் என்றில்லை. உங்களின் கணினியிலும் இதை  பயன்படுத்த முடியும். 200க்கும் மேற்பட்ட ரெசிபி இணையதளங்களுடன் இணைந்திருப்பதால், விரும்பிய  ரெசிப்பிக்களை இதில் சேமித்து வைக்கலாம்.

கார்த்திக் ஷண்முகம்

Related Stories: