புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் ரெங்கசாமி முன்னிலையில் இணைந்தார் லட்சுமி நாராயணன்

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி புதுச்சேரி முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் லட்சுமி நாராயணன் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருந்த லட்சுமி நாராயணன், தமது எம்.எல்.ஏ பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில் புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என லட்சுமி நாராயணன் குற்றம் சாட்டினார். கடந்த வாரம் அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவிருந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முதலமைச்சரின் பாராளுமன்ற செயலாளருமாக இருந்த லட்சுமி நாராயணன் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். நான் முதல்வராக இருந்த போதே நல்ல முறையில் பணியாற்றியவர் லட்சுமி நாராயணன் என அக்கட்சியின் தலைவர் ரெங்கசாமி பேட்டியளித்தார். ஆளுங்கட்சியில் இருந்த போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லக் கூடியவர் லட்சுமிநாராயணன் என கூறினார். லட்சுமிநாராயணன் இணைந்தது என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வலுவூட்டி உள்ளது என தெரிவித்தார். பாஜக உடனான கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவை அறிவிப்போம் என கூறினார்.

Related Stories: