கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள நகைக்கடன்கள் எவ்வளவு? கூட்டுறவு வங்கிகளுக்கு சுற்றறிக்கை

சென்னை: கூட்டுறவு நிறுவனங்களில் ஜனவரி 31ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள நகை கடன்கள் எவ்வளவு என்று தெரிவிக்குமாறு அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். கூட்டுறவு நிறுவனங்களில் 6 சவரன் வரை நகையை அடகு வைத்து பெற்ற கடன்களை தள்ளுபடி செய்வதாக சட்டப்பேரவையில் கடந்த 26ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்ட நாள் முதல் கூட்டுறவு வங்கிகளுக்கு தினமும் வந்து செல்லும் வாடிக்கையாளர்கள் நகை கடன் தள்ளுபடி குறித்து தெரிவிக்குமாறு வங்கி அதிகாரியிடம் கேட்டு வருகின்றனர். வங்கி அதிகாரிகளும் முதலமைச்சர் அறிவிப்பு சந்தேகம் இல்லாமல் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறி வாடிக்கையாளர்களை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வரை கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் இருக்கும் நகை கடன்கள் எவ்வளவு என்று தெரிவிக்குமாறு அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். நிலுவையில் உள்ள நகைக்கடன் விவரங்களை தொடர்புடைய பிரிவுகளின் கீழ் மின்னஞ்சல் அனுப்பி வைக்குமாறு அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் பதிவாளர் சுப்பிரமணியன் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: