தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலிலும் 9, 10, 11-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? அதிகாரிகளுடன் அளுநர் தமிழிசை 2-வது முறையாக ஆலோசனை

புதுச்சேரி: தமிழகம் போன்று புதுச்சேரியிலும் 9, 10, 11-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது பற்றி ஆளுநர் தமிழிசை ஆலோசனை நடத்தி வருகின்றார். தேர்வுகளை ரத்து செய்வது பற்றி பெற்றோர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக கடந்த வாரம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்தார். புதுச்சேரி, காரைக்காலில் 9, 10, 11-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வில் ஏற்கெனவே உள்ள நடைமுறை தொடரும் என கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆளுநர் அறிவித்திருந்தார். எல்லோரும் எழுதித் தேர்ச்சி பெறுவார்கள் எனவும் கூறியிருந்தார். கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதிய உணவு, பால் போன்றவற்றை குழந்தைகளுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் வழங்கவும் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் தேர்தலுக்குப் பின்னால் தேர்வு வைக்கலாமா என கேபினெட் அறையில் தலைமைச் செயலர் அஸ்வனி குமார், மத்திய உள்துறையால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் சந்திரமவுலி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு தேர்வுத் தேதியை மாற்றி அமைக்க உள்ளோம் எனவும், அதைத் தற்போது அறிவிக்க முடியாது எனவும் கூறியிருந்தார். மேலும் தற்போது 2-வது முறையாக புதுச்சேரி, காரைக்காலில் தேர்வு நடத்தலாம? வேண்டாமா என அதிகாரிகள், பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: