தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் செலவினங்கள் போன்றவற்றை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. சத்யபிரதா சாகு நேற்று பேசுகையில், ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த பறக்கும் படையானது பண விநியோகம் மற்றும் பொருட்கள் விநியோகம் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும். தமிழகத்தில் பதற்றமான 6,000 வாக்குச்சாவடிகளில் மேலும் துணை ராணுவ படையினரை அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அதேபோல பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இந்த நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், கண்காணிப்பு குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: