அதிமுக கூட்டணியில் பா.ம.க.வுக்கான தொகுதிகளை அடையாளம் காண்பதில் சிக்கல்

சென்னை: அதிமுக கூட்டணியில் பாமக.வுக்கான தொகுதிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிமுகவுக்கு சாதகமான தொகுதிகளில் போட்டியிட பாமக விருப்பம் தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக கோரும் பல தொகுதிகளில் அதிமுகவுக்கு சாதகமானது என்பதால் ஒதுக்க கட்சி தயக்கம் காட்டி வருகிறது. எந்தெந்த தொகுதிகளை பாமகவுக்கு ஒதுக்குவது என்பது குறித்து அதிமுக குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

Related Stories: