தேர்தல் சிறப்பு பணியில் இருந்து கோயில் செயல் அலுவலர்களுக்கு விலக்கு: அறநிலையத்துறை ஆணையருக்கு கடிதம்

சென்னை: தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்க தலைவர் அருட்செல்வன், பொதுச்செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அறநிலையத்துறை ஆணையர் பிரபாகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மார்ச், ஏப்ரல் மாதங்களில் மாசி-சித்திரை பிரமோற்சவம் மற்றும் பால்குடம், திருத்தேரோட்டம், தெப்பத் திருவிழாக்கள் நடைபெறும் காலமாகும். இந்த சமயத்தில் செயல் அலுவலர்கள் கோயில்களில் இருக்க வேண்டியது அவசியம். விழாக்களின் போது, திடீரென எழும் சாதி பூசல்கள், கோஷ்டி சண்டைகளை உடன் தளத்தில் தீர்க்க வேண்டிய அவசிய நிலையும் உள்ளது. மேலும், நீதிமன்றங்களுக்கு தவறாமல் வழக்குகளில் ஆஜராக வேண்டிய சூழலும் உள்ளது.

தற்போது அனைத்து கோயில்களிலும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி அளவீடுகள் அளவிடும் பணியும் நடந்து வருகிறது. அளவீட்டின் போது செயல் அலுவலர்கள் உடன் இருக்க வேண்டியது இன்றியமையாததாகிறது. எனவே தேர்தல் பணியில் இவ்வாண்டும் வழக்கம் போல் செயல் அலுவலர்கள் அவர்களது பணி சூழ்நிலை முன்னிட்டு ஈடுபடுத்தாமல் அதிலிருந்து விலக்கு அளிக்க பணிந்து கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: