தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் புதிய கட்சிகள் தொடங்க 7 நாள் மட்டுமே போதும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: தமிழகம் உட்பட தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் புதிய கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பு காலம், 30 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியை பதிவு செய்தால், அதனை பரிசீலனை செய்து அதற்கான அதிகாரப்பூர்வ பொது அறிவிப்பு வெளியாக 30 நாட்கள் வரை அக்கட்சியினர் காத்திருக்க வேண்டும். இதனால், தேர்தல் நேரத்தில் புதிய கட்சிகள் தொடங்குபவர்களுக்கு இது மிகப்பெரிய சிக்கலாக இருந்து வருகிறது. மேலும், பதிவில் ஏதேனும் பிழை இருக்கும் பட்சத்தில் மீண்டும் அதனை திருத்தி தரவும் வேண்டும்.

இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், ‘கட்சி தொடங்குவது குறித்து செய்தி தாள்களில் விளம்பரம் கொடுத்து, அதை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்பதற்கான அவகாசம். தற்போதுள்ள 30 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைக்கப்படுகிறது. கொரோனா காரணமாக தேர்தல் ஆணையத்தில் கட்சிகளை பதிவு செய்வதில் நிறைய சிரமங்கள் இருந்ததால், இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: