கோ-வின் செயலியில் மூத்த குடிமக்கள் ஆர்வம்: கொரோனா தடுப்பூசிக்காக 50 லட்சம் பேர் முன்பதிவு

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. அரசு உருவாக்கியுள்ள கோ-வின் செயலியில் கொரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொள்பவர்கள் தாங்களாகவே தங்களின் விவரங்களை பதிவிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்கான முன்பதிவு நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தொடங்கியது. இதனை தொடர்ந்து, ஏராளமானோர் ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதிலும் 50 லட்சம் பேர், இந்த செயலியில் முன்பதிவு செய்துள்ளனர். நேற்று பிற்பகல் வரை 60 வயது மற்றும் 45-60 வயதுடைய 2 லட்சத்து 8 ஆயிரத்து 791 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Related Stories: