தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு 448 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு 448 குறைந்தது. மத்திய அரசின் பட்ஜெட் கடந்த மாதம் 2ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 2.5 சதவீதம் குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை குறைந்தது. தொடர்ந்து 4 நாட்களில் சவரன்  1,360 அளவுக்கு குறைந்தது. அதன் பிறகு தங்கம் விலை சற்று ஏறுவதும், இறங்குவதுமான போக்கு காணப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் 4,342க்கும், ஒரு சவரன் தங்கம் 34,736க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது.

அதாவது கிராமுக்கு 76 குறைந்து ஒரு கிராம் 4,266க்கும், சவரனுக்கு 608 குறைந்து ஒரு சவரன் 34,128க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு 56 குறைந்து ஒரு கிராம் 4,286க்கும், சவரனுக்கு 448 குறைந்து ஒரு சவரன் 34,288க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை மீண்டும் சவரன் 34288க்கு கீழ் சென்றுள்ளது. விலை குறைவால் நேற்று காலை முதல் நகைக்கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டதாக வியாபாரிகள் கூறினர்.

Related Stories: