மியான்மரில் போராட்டத்தை ஒடுக்க முயற்சி போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு

யங்கூன்:  மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர், மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் ஆகிறது. அதற்கு எதிராக மக்கள் தொடங்கி போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில், யங்கூனில் நேற்று மருத்துவ மாணவர்கள் பேரணி நடத்தினார்கள். சாலைகளில் திரண்ட மாணவர்கள், ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங் சாங் சூகி உள்ளிட்டோரை விடுவிக்க கோரியும் முழக்கங்களை எழுப்பினார்கள். இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது ராணுவம் மோசமான தாக்குதல் நடத்தியுள்ளது.

போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். கூட்டத்தை கலைப்பதற்கு தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.  போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலரை ராணுவத்தினர் பிடித்து வாகனங்களில் ஏற்றி சென்றனர். போராட்டம் நடந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. மேலும் குண்டு பாய்ந்து ேமாசமான ரத்த வெள்ளத்தில் கிடக்கும் வாலிபர், கூட்டத்தினரை கலைப்பதற்கு கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

Related Stories: