இதுக்குமா பட்ஜெட்?

காசுக்கு மட்டுமல்ல கார்பன் டை ஆக்ஸைடு எனப்படும் கரியமில வாயுவுக்கும் பட்ஜெட் இருக்கு தெரியுமா?கடந்த 2015ம் ஆண்டு புவி வெப்பமாதலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் பாரிஸ் ஒப்பந்தம் என்பதில் கையொப்பமிட்டன.  அதன்படி, புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் ஒவ்வொரு நாடும் தொழிற்சாலைகள் மூலம் வெளியிடும் கரியமில வாயுக்களைக்  கட்டுப்படுத்த வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

கரியமில வாயுவை மரங்கள் சுவாசிக்கின்றன. ஆனால், நாம் தொழிற்சாலைகள் மூலம் வெளிப்படுத்தும் கார்பன்கள் இந்த மரங்களின் தேவையைவிட  மிக அதிக அளவில் உள்ளன. இதனால், கார்பன் இருப்பு அதிகமாகி புவி வெப்பமாகிவிடுகிறது. வெறும் அரை டிகிரி செல்சியஸ் வெப்பம்  உயர்ந்தால்கூட ஓர் உலகப் போருக்கு நிகரான எண்ணிக்கையில் மக்கள் மரணமடையக் கூடும் என்ற நிலையில், உலக அளவில் சராசரி வெப்ப நிலை  உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ்க்கு மேலே செல்லாதவாறு கட்டுப்படுத்த வேண்டியது ஒவ்வொரு நாட்டின் கடமை என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.கார்பனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியும் என்ற கணக்கீட்டின்படி, ஒவ்வொரு நாட்டுக்குமான  கார்பன் பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு மேல் கார்பன் டை ஆக்ஸைடு அந்நாடு உற்பத்தி செய்யக் கூடாது என்பது விதி.

Related Stories: